Wednesday, September 13, 2006

காலமிட்ட விலங்கையும் உடை



பொல்லெடுத்து
உனை அடித்தார்களா..!
சொல்லெடுத்து
மனம் சிதைத்தார்களா..!
மெல்லியவள் என்று சொல்லி
மெல்லவே பின்னே
தள்ளியவர் முன்னே
கல்லுடைத்து...
வாழ்வின்
வளம் பொருத்த முனையும்
பெண்ணே..!
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!

சந்திரவதனா
யேர்மனி
10.3.2003

4 comments:

மதுமிதா said...

///
உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும் உடை
வெல்வாய்!
///

நன்று சந்திரவதனா.

பொல்லெடுத்து- இதன் பொருள் சொல்லுங்கள்.

மலைநாடான் said...

//உடை
கல்லோடு சேர்த்து
காலமிட்ட விலங்கையும்உடை
வெல்வாய்! //

சந்திரவதனா!

அந்த இரண்டாவது உடை என்ற பதம் வந்திருக்கத் தேவையில்லையோ?

படமும், கவிதையும், ஏன் கருத்தும் கூட மிக அழகு

வாழ்த்துக்கள்!

Chandravathanaa said...

மதுமிதா
நன்றி.

பொல் என்பது பொல்லு அல்லது ஊன்றுகோல் என்று பொருள் படும்.
மொத்தமான தடியையும் பொல்லு என்று சொல்வதுண்டு.

Chandravathanaa said...

மலைநாடான்

உங்கள் கருத்துக்கு நன்றி.
அந்த இரண்டாவது உடை பற்றி யோசிக்கிறேன்.