மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்
மலரினைத் தலையில் வைத்து
மலரே என்பார்
சொல்லினை அம்பாய் எய்து
துடிக்காதே என்பார்
வேரினில் குத்தி விட்டு
வாடாதே என்பார்
கையினில் தீயைத் தந்து
தீயாதே என்பார்
கண்ணிலே கையை விட்டு
கலங்காதே என்பார்
புண்ணினைக் கிளறி விட்டு
புளுங்காதே என்பார்
மண்ணினைத் தாங்குவாள் போல்
பொறுமை கார் என்பார்
நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்
பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் . என்ன சொல்வார்
பேதைதானே நீ
பேசாதே என்பாரா?!
சந்திரவதனா
யேர்மனி
17.8.2000
6 comments:
அருமை. அருமை.
அன்புடன் மோகன்
http://tamilamudhu.blogspot.com
மோகன்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி
//பேதைதானே நீ
பேசாதே என்பாரா?!//.
சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
இராமன் தீக்குளிக்கட்டும்
நிலவு நண்பன்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி
சந்திரவதனா!
அதெல்லாம் மலையேறி விட்டது.பெண்களில் நல்ல முதிர்ச்சி உருவாகியுள்ளது.அதை வரவேற்ப்போம்.
யோகன் பாரிஸ்
யோகன்
முதிர்ச்சி ஒரு புறம் உருவாகியுள்ளதுதான். அதை மறுப்பதற்கில்லை.
முதிராதவையும் பல உள்ளன. அதையும் மறுப்பதற்கில்லை.
முடக்கப் படுவது தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலும் பல பெண்கள் இருக்கிறார்கள்.
Post a Comment