யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை
சிலர்தான்
கிளறிக் கிளறி
கிளர்ந்தெழுகிறார்கள்
சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்
இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணிகிறார்கள்
பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு
யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணிக் கோணி வீணே நிற்காதே
திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்
தொலைக்காதே உன்னை
தொலைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை
தொலைத்து விடு
பெண்ணென்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணென்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களை...
மார்ச் - 2000
8 comments:
// யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை//
மிக யதார்த்தமான உண்மை..
நல்லாயிருக்கு..
// "தொலைக்காதே உன்னை"//
தலைப்புங்கூட அருமை..
பெண்மையை போற்றும் கவிதை...
அருமை பெறுமை
தினேஷ்
All kavithai also verry good,
Pls fwd., the all kavithai.
My mail ID: a.silambarasan@googlemail.cim
Thanks,
a.silambu
நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம் என்பதை மீண்டுமொரு தரம் நினைவு படுத்துகிறது இந்தக் கவிதை... நம்பிக்கை கவிதையில் அறிவுரை கூறுவதனூடாகத் துளிர்க்கிறது.... தொடருங்கள்///
"பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு" ...
"
திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்"
இனிய கருத்தச் செறிந்த வரிகள்.
புதுவருட வாழ்த்துக்கள்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா - என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன
நன்றி ரசிகன்!
நன்றி மெல்போர்ன் கமல்!
நன்றி சிலம்பரசன்!
நன்றி தினேஷ்!
நன்றி டொக்டர்!
நன்றி சிவகுமாரன்!
Post a Comment