Thursday, October 05, 2006

கல்யாண சந்தை



இது ஒரு
வினோதமான சந்தை

எல்லாப் பொருட்களையும்
பணத்துக்காக விற்பார்கள்
இங்கு மட்டும்
பெண் என்ற
உயிர்ப் பொருள் ஒன்று
பணம் கொடுத்து
விற்கப் படும்.

சந்திரவதனா
ஜேர்மனி
2003

3 comments:

Chandravathanaa said...

Roby
கருத்துக்களுக்கு நன்றி.
அரேபியர்களும் துருக்கியர்களும் இன்னும் சில இனத்தவர்களும் அப்படிக் கொடுப்பதை நானும் அறிந்திருக்கிறேன்.
உங்கள் தாத்தாவும் கொடுத்தாரா!

அனேகமான முஸ்லிம்கள் பணம் கொடுத்து வாங்கி பெண்களை அடிமைகள் போலத்தான் நடத்துகிறார்கள். அவர்கள் வெளியில் போய் விட்டு வந்து இருந்தால் பெண்கள் அவர்கள் கால்களைக் கூடக் கழுவித் துடைத்து விட வேண்டும்.

எமது சமூகத்தில் பெண்கள் இவ்வளவு கேவலப் படுத்தப் படுவதில்லை. ஆனால் சீதனம் பெண் கொடுப்பது இன்னும் ஒழியவில்லை. சகோதரிகளின் சீதனத்துக்காக ஓடாகத் தேயும் பல அண்ணன், தம்பிகளை நான் இங்கு ஜேர்மனியில் கண்டிருக்கிறேன்.

abey said...

மிக அற்புதமான கவிதை.சில வரிகளில் ஆணித்தரமக கருத்தை வலியுறுத்துகின்றது

தினேஷ் said...

மனிதன் உணரமறுக்கும் உண்மை...

வாழ்த்துகளுடன்,
தினேஷ்