அழகான முத்திரை
ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்
காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்
அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது
ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை.
சந்திரவதனா
யேர்மனி
21.7.99
3 comments:
ஆம் இதழ்களின் இணைப்பில் ஓருடம்பாகும் ஈருடல்கள்.
நன்றி உதயச்செல்வி
very Very nice. All the best and continue your job.
Post a Comment