நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி..!
உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.
திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்...
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு... நான்
அவை
வெடித்துச் சிதறி...
"மனநோயாளி" என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா..?
நடிப்புடனா..?
சந்திரவதனா
ஜேர்மனி
24.3.2002
http://www.selvakumaran.de/index2/kavithai/mananoyali.html
4 comments:
நல்லா இருக்கு.
எப்படி இத்தனை பதிவுகளை கையாள்கிறீர்கள்? உங்கள் திறமை இதிலேயே தெரிகிறது.
கார்மேகராஜா
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
அருமை... அருமை...
வாழ்த்துக்களுடன்,
தினேஷ்
Post a Comment